Search This Blog

Thursday, 31 January 2019

கடிதம் 27 - செல்வத்தின் தலைமைக்கு ஆபத்து - உல்டா.

கடிதம் 27 - செல்வத்தின் தலைமைக்கு ஆபத்து - உல்டா.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 31/01/2019, (கடிதம் 27, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
======================
செல்வத்தின் தலைமை சாதித்தது என்ன?
===================
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பதிவு செய்த தொலைபேசி உரையாடலையும் கேட்டிருந்தேன் இதே உரையாடல்கள் போன்று பல புலம்பெயர் ரெலோ தோழர்களிடம் தினம் தினம் சந்திக்கும் போது கேட்கும் பேச்சுக்கள் "செல்வம் என்னவாம் என்ன செய்கிறார் உவங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியாது தங்கட குடும்பங்களுக்கு உழைக்கிறாங்கள் மக்கள் பற்றி அக்கறையில்லை" என்பதே !!!!
இரு நாட்களுக்கு முன்பு கனடாவிலிருந்து ரெலோ இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய முன்னின்ற செட்டியும், பிரான்சு நித்தியண்ணரும் தொலைபேசியில் ரெலோ பற்றிய அதிருப்தியில் பேசியிருக்கிறார்கள் ஒரு பக்கத்தில் நின்று கேட்டுக் கொண்டு நின்றவர் இதை செல்வத்துக்கு சொல்ல,
செல்வம் பதறிப் போனாராம் தனக்கு எதிரா ரெலோவுக்குள் சதி என லண்டன் கனடா என தொல்லைபேசி அழைப்புக்களாம்.
இதில் முதலாவது விடயம் எனக்கு ஞாபகம் வந்தது என்னவென்றால் 1984 ம் ஆண்டு சிறீசபாவை கடத்தி கொலைசெய்ய அல்லது அடக்கி வைக்க என சுதன்-ரமேசு செல்வம் உட்பட பிரபாகரனிடம் துப்பாக்கியும் நஞ்சுப் போத்திலும் வாங்கியதை விடவா பெரிய விடயம் நடந்துள்ளது, இதை பிரபாகரன் சிறியை தன்னிடம் தரும் கேட்டது எமக்கு இன்றும் நேற்றுப்போல் உள்ளது. அதில் செல்வமும் உடந்தையே.
ஒவ்வொரு நாளும் செல்வத்தை திட்டும் பலர்.
கிழக்கில் எத்தனை அட்டூழியங்ஙள் நடக்கின்றது இவற்றுக்கு ரெலோ போராட்ட இயக்கமாக என்ன நடவடிக்கை எடுக்கின்றது ? ஏன் இவை பற்றி பேசுவதில்லை இதன் பின்னணியில் ரெலோவும் லஞ்சம் வாங்கிக் கொண்டு பார்த்துக் கொண்டு இருக்கிறதா ? அல்லது துணிவில்லாத ரெலோவா?
செல்வம் தனது சுய நல சிந்தனையை வீட்டு "மக்கள் நல" சிந்தனைக்கு வர வேண்டும் துணிந்து முடிவு எடுக்க முடியாது பயப்பிட்டால் முணிவு எடுக்க கூடியவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும்.
இக்கருத்தை எழுதியவுடன் ஒ, ஓஓ, இவரும் அந்த குழுதான் என்ற சிறுபிள்ளைகள் அழுவது போல் அழ வேண்டாம், நிதானமாக கடந்ததிலிருந்து இனி வரும் காலம் பற்றி யோசியுங்கள்.
நீங்கள் இயக்கத்துக்கு வந்தது பாராளுமன்றத்துக்கு போக அல்ல மக்களை இன அழிவிலிருந்து பாது காக்கவே உங்கள் முன்னால் தமிழ் பெண்கள் இசுலாமிய பயங்கரவாதிகளால் மானபங்கப் படுத்தப்படுகிறார்கள் இதற்கான சட்ட நடவடிக்கைக்கு ரெலோ முன்னிற்க வேண்டாமா ?
புலிகளின் பின்னர் 10 வருடங்கள் செல்வம் தலைமை வகித்து சாதித்தது என்ன வென்றால் அடுத்த தேர்தலில் " ரனில் ரெலோவுக்கு ஒரு பா உ ஆசனம் என்றாலும் தருவார் " அதை செல்வம் எடுப்பதே, சிலவேளை ஒரு அமைச்சு பதவி எடுக்கலாம் என்ற யோசனையை வளர்த்தது மட்டுமே.
ஏன் செல்வம் தலைமை பதிவியை ஒரு கிழக்கு மாகாணத்தவனுக்கு கொடுத்து மத்திய கமிட்டியில் இருந்து ஆலோசனை வழங்குபவராக இருக்க கூடாது.
செல்வம் என்ன சாகும் வரை ரெலோ தலைவரா ?
ரெலோ மிதவாத கட்சிகள் போன்று 97 வயது வந்து அறளை பேந்தாலும் தலைவர் என்பது மாகாதவறு, புதிய சந்ததியிடம், இதர உறுப்பினர்களையும் அவர்களது சிந்தனையிலுப் இயங்க இடம் கொடுக்க வேண்டும். இதை நான் ஐேர்மன் சந்திப்பில் கூறிய போது ஏற்றுக்கொண்ட செல்வம் இதை இப்போ செய்ய வேண்டும். (இனிமேல் செல்வம் என்னை சந்திப்பீர்களா அந்த ஆழுமை துணிவு இருக்கிறதா என பார்க்கின்றேன்)
ரெலோ உங்கள் வீட்டு சொத்து என்ற நினைப்பை மாற்றுங்கள் ஐனாவை, கென்றியை தலைவராக்குங்கள் அவர்கள் கிழக்கு மாகாண நிலைமைகளுக்கு கிழக்கு மக்களுடன் இணைந்து இயங்க ஒத்துழையுங்கள், இதுவே இன்றய தேவையாகும்.
அல்லது ரெலோ பாராளுமன்ற அரசியலுக்கு சமாந்தரமாக போராட்ட இயக்கத்தை வலுப்படுத்துங்கள்.

எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Monday, 28 January 2019

கடிதம் 26 - புலம்பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறுப்புக்கள்.

கடிதம் 26 - புலம்பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறுப்புக்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 30/01/2019, (கடிதம் 2, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
======================
புலம் பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறூப்புக்கள்.

=====================================
புலம் பெயர் நாடுகளில் ரெலோவின் ரீ-வடை குறூப்புக்கள்.
===================================
தமிழீழ விடுதலை இயக்கத்துடன் தொடர்புடன் இருந்த உறுப்பினர்கள், போராளிகள், இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள், இந்திய பயிற்சி பெற்றவர்கள் பிரச்சாரப்பிரிவில் ஈடுபட்டவர்கள் என சராசரியாக 400 பேர்களும் ரெலோவின் ஆதரவாளர்கள் என மேலும் 200-500 பேர்கள் வரையிலும் புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய, கனடா நாடுகளில் வாழ்கின்றார்கள் இவர்களில் அநேகமானவர்கள் ரெலோ பற்றிய மனநிலையுடனேயே வாழ்கின்றார்கள், அநேகமானோர் ரெலோவுக்காக உதவி செய்யும் மனநிலையிலும் இருக்கிறார்கள், கணிசமான தொகையினர் தொழில்துறையில் மேம்பட்டவர்களாவார்கள்.
ஆனால்
ரெலோவிலிருந்து யாரும் இவர்களை அணுகுவதில்லை, பொருட்படுத்துவதில்லை.
அவர்களின் பெறுமதியை உணர்வதில்லை அல்லது உணரத்தெரியாது, இது போன்றே இலங்கையிலும் ரெலோ தோழர்களையும் ஆதரவாளர்களையும் ரெலோ திரும்பியும் பார்ப்பதில்லை.
புலம்பெயர் நாடுகளில் ரெலோ இயங்குபவர்கள் ரெலோ ஆதரவாளர்களுடன் இயங்காமைக்கான காரணங்கள் சில உண்டு.
1) புலம்பெயர் ரெலோ அமைப்பு உறுப்பினர்களில் பலர் ஐரோப்பாவில் இருக்கின்ற போதிலும் இலங்கையில் ரெலோ எப்படி 1988-90 களில் இயங்கியதோ அதே எண்ணங்களுடனேயே இயங்கின்றார்கள்.
2) புலம்பெயர் நாடுகளில் ரெலோ ஆதரவுத் தமிழர்களை அடையாளம் காணத் தவறிவிட்டனர் இப்போது எப்படி என்று முழிக்கின்றனர்.
3) புலம் பெயர்நாடுகளில் ரெலோ என கெத்துடன் நாட்டாண்மை காட்டித்திரிபவர்களில் பலர் தமது இயக்க காலத்தில் செய்த பயங்கரவாத செயல்கள் வெளிவந்து விடுமோ என்ற பய உணர்வு காரணமாக புலம்பெயர் தமிழர்களிடம் போவதில்லை.
4) கடந்த பல வருடங்களாக புலம்பெயர் நாடுகளில் இயங்கும் ரெலோவில் இன்று வரையில் முன்னால் ரெலோ தவிர வேறுயாரையும் இணைக்க முடியவில்லை.
5) முன்னணியில் இருப்பவர்களுக்கு அமைப்பு அமைப்புக்கும் தமிழ் மக்களுக்கும், அமைப்புக்கும் அதன் உறுப்பினர்க்குமான உறவு நிலை பற்றிய புரிதல் இல்லாதவர்கள் - இன்றும் அன்றய இயக்க இராணுவ இயக்க இயங்கு நிலை போன்றே சிந்திக்கின்றார்கள்.
6)சிலர் சமூகத்தில் மற்ற மனிதர்களுடன் பேச, பழக வேண்டும் என்ற சமூக அறிவு வளர முன்பே இயக்கங்களுடன் இணைந்தவர்கள் சமூக இயக்கம் பற்றிய அறிவில் தாழ்ந்து இருக்கிறார்கள், இதற்க்கு நல்ல உதாரணம் லண்டன் பொறுப்பாளர் இவர் இதர ரெலோ உறுப்பினர்களுடன் பேசும் முறை பற்றி ரெலோ தோழர்களே நல தடவைகள் கருத்து பரிமாறியுள்ளனர்.
7)குறிப்பாக லண்டனில் இயங்கும் ரெலோ உறுப்பினர்களில் சிலரும் பொறுப்பாளரும் தமது லண்டன் கெத்தை தமக்கு காட்டுவதாக இலங்கை ரெலோ, கனடா ரெலோ, சூவிசு ரெலோ, இலங்கையில் ரெலோ மத்திய கமிட்டி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
8)லண்டன் ரெலோ பொறுப்பாளரே புலம் பெயர் ரெலோ ஐக்கியத்தை குலைத்தவன் என்றும் இது தோழர்களுடன் பேச பறையத் தெரியாமலே இவனது மொக்குத்தனத்தால் இந்த நிலை புலம்பெயர் ரெலோவுக்கு வந்தது என பலர் கூறியுள்ளனர்.
9)பலர் பேச்சுக்களை பதிவு செய்து பரிமாறியுள்ளார்கள்.
10)யுகே ரெலோவில் எனது அனுபவம் தனியான கடிதமாக வெளிவரும்.
11)ஒவ்வொரு நாடுகளிலும் இரண்டு, மூன்று குறுப்புக்கள், குறுப்புக்குள்ளே இருந்து கொண்டு குறுப்போட்டு பேசுவது.
12)அமைப்பை எப்படி உருவாக்குவது பராமரிப்பது, இயக்குவது பற்றிய அறிவற்றவர்கள், கடந்த பல வருடங்களாக தமது இயக்க முறைகளின் தவறுகளை புரியாதவர்கள்.
அதேபோல மற்றய நாடுகளில் உள்ளவர்கள் ரெலோ அமைப்புக்குள்ளேயே சாதாரண நடைமுறைப் பிரச்சனையை பகை முரண்பாடாக்குபவர்களாக இருக்கிறார்கள்.
13)முரண்பாட்டை தீர்க தெரியாது ஊதி பெருப்பிக்கும், தமது சுய இன்பத்துக்காக முரண்பாடுகளை வளர்க்கும் அமைப்பாகவே இயங்குவதை நான் அவதானிக்கிறேன்.
14)படம்பிடித்து முகநூலில் போட்டால் சரி இயக்கம் இயங்குகின்றது என்ற திருப்தியடைபவர்கள்.
15)இலங்கையில் ஊருக்கு சேவை செய்த பலபல ஊர்ச்சங்கங்கள் செய்த உதவியில் ஒரு சிறுபகுதி கூட ரெலோ புலம் பெயர் உறுப்பினர்களால் செய்ய முடிய வில்லை.
16)எதுவும் செய்யாத கூட்டங்கள் தனிமனித விருப்புக்கு முதலிடம் கொடுப்பது முன்னேறும் பக்குவமல்ல.
18)பொதுஇயக்க முறைக்கும் தனிப்பட்ட நடத்தைக்கும் வேறுபாடு புரியாதவர்கள்.
ரெலோ புலம்பெயர் அமைப்புக்கள் ஒரு ரீ-வடை குறுப் மட்டும் தான் எதையும் சாதித்துவிடப் போவதில்லை, யாரும் விசேடமாக இயங்கினால் மட்டும்.
(சுவிசில் இயங்கும் சேகர் தலைமையில் இயங்கும்
" நமக்காக நாம் " (Telo Sarvathesam என்ற ரெலோ ரெலோ அமைப்பு இந்த மேற்குறித்த விமர்சனங்களுக்குள் அடங்காது)
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Friday, 25 January 2019

கடிதம் 25 - தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் உரிமம் யாருக்கெல்லாம்.

கடிதம் 25 - தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் உரிமம் யாருக்கெல்லாம்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 30/01/2019, (கடிதம் 25, மாதம்01, கிழமை 05)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
=================
தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயர் யாருக்கு சொந்தம்.
=============

தமிழீழ விடுதலை இயக்கம் தங்கத்துரை காலம் தொடக்கம் இயங்கிக் கொண்டு வந்த அத்தனை பேருக்கும் உரிமையுள்ள பெயராகும்.
இன்று தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரில் ஒரு கட்சி இயங்குவதாயின் அக்கட்சிக்காக தம்உயிரை அர்ப்பணித்த தங்கத்துரை தொடக்கம் பின்னால் வந்த இயக்க தோழர்கள் வரையில் செய்யப்பட்ட அர்ப்பணிப்புக்களாலேயே என்பதை ரெலோ தோழர்களுக்கு செல்வம் புரிய வைக்க வேண்டியது கடமையாகும்.
ஏனெனில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் என தலைவர் செல்வத்தால் அடையாளப்படுத்தப்பட்டு இயங்குவதாக கூறும் பலருக்கு இதன் தாற்பரியம் புரியவில்லை என்பதை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த வைபர் குறுப் செய்தி வெளிப்படுத்தியது. (இந்த வைபர் குறுப் தலைவர் செல்வத்தின் ஆட்களாலேயே நடாத்தப்படுகிறது வேறுயாரும் என குற்றம் சாட்ட வேண்டாம்.
தமிழீழ விடுதலை இயக்கத்துக்காக இரவு பகலாக தமது பணங்கள் சொத்துக்களை கொடுத்து இயங்கிய பல தோழர்கள் இறுதியில் தம் உயிரையும் கொடுத்தனர், மேலும் சிலர் அரசியலிலிருந்து விலகி வாழ்கின்றனர், இவர்களின் அர்ப்பணிப்பினாலும் இன்று இந்த பெயரை தாங்கள் வைத்து கட்சியை நடாத்துகின்றீர்கள் என்பதை நினைவுபடுத்துகின்றேன்.
இதைவிட இரவு பகலாக உழைத்த பல தோழர்கள் நீங்கள் ரெலோ கட்சியை எப்படி நடாத்துகின்றீர்கள் என்பதை அவதானித்துக் கொண்டு வாழ்கின்றார்கள் அவர்களில் பலர் இன்று ரெலோ வின் இயங்கு முறை பற்றி பல முரணான கருத்துக்களுடன் இருக்கிறார்கள்.
ரெலோ நாட்டில் இயங்கிய காலத்தில் ரெலோவுக்காக உழைத்த பல பல பொது மக்கள் இன்றும் ரெலோ பற்றிய அவதானத்துடன் ரெலோ தம்முடன் ஒரு வார்த்தை பேச வில்லை என்ற கோபத்துடன் வாழ்கின்றார்கள்,
இவர்களைவிட இலங்கை சிறைச்சாலைகளில் இருந்த தோழர்களில் அளவில் அதிகமானோர் ரெலோ உறுப்பினராகவே 1988வரையில் இருந்து சிறையனுபவித்தனர்.
இதைவிட புலிகளால் ரெலோ தாக்கப்பட்டபோது பாதுகாத்த பல பல மக்கள் குறிப்பாக பெண்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றையும் விட ரெலோவுக்காக தம்மை அர்ப்பணித்து தமது அங்கங்களை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர்.
புலிகளை எதிர்த்து இலங்கையில் ரெலோ இயக்கத்தை மீள கொண்டு வந்து இறக்கி புலிகளுடன் போராடி ரெலோ பெயரை காப்பாற்றியவர்கள் என பலதரப்பட்ட தமிழர்கள் தோழர்களின் இயக்கத்தாாலேயே பெயர் காப்பாற்றப்பட்டது என்பதை இன்று ரெலோ என்று இயங்குபவர்கள் நினைப்பதில்லை, ரெலோ தலைவர் செல்வம் உட்பட என்பது வேதனைக்குரியதாகும்.
சில முக்கிய உறுப்பினர்கள் ஏன் தாம் ரெலோவிலிருந்து தூர நிற்கிறோம் என்பது வேதனையான கதைகள் australia விலிருந்து லண்டன் வரை உள்ளன.
மேற்குறிப்பிட்ட இத்தனை தரப்பினர்க்கும் ரெலோ உரிமையுள்ளதை நினைவு படுத்த விரும்புகிறேன்.
இந்த மக்கள், உறுப்பினர்களைப் பற்றி எந்த அக்கறையுமற்று விடுதலைப் போராட்ட அமைப்பு, தலைமை இருக்க முடியுமா?
இந்த பெருமக்களுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்குமான உறவு ,தொடர்பு என்பது என்ன? ஏன் இவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்துடன் இணைந்திருந்தனர் அதற்கான சமூகத்தேவை என்ன?
விடுதலை இயக்கம் இது பற்றி என்ன கருத்துடன் இயங்குகின்றது ?
இவர்கள் உங்களுக்கு வாக்குகளை போட்டு உங்களை மீண்டும் மீண்டும் பாராளுமன்றத்துக்கும் மாகாண சபைக்கும் அனுப்பினால் சரியா? அதுவா மக்கள் இயக்கத்தின் இயங்கு முறை ?
தமிழீழ விடுதலை இயக்கம் என்ற பெயரை அவ்வியக்கத்தை கட்டியெழுப்பியவர்கள் பாவிக்க உரிமை இல்லை என்றால் உங்கள் தேர்தல் கட்சிக்கு வேறு பெயரை வைக்க வேண்டுமே தவிர இயக்கத்தை கட்டியவர்களை தடுக்க வேண்டாம் என கேட்டு பதிவை முன்வைக்கிறேன்.
இன்றய பல ரெலோ உறுப்பினர்கள் இந்த விடயங்களில் எந்த வித சிந்தனையும் அற்று நேற்று தாம் பதிவு செய்த கட்சி போல் தம்மில் சிலர் ஒன்று கூடினால் அது கட்சியின் விடயம் என்ற மனநோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கு குறிப்பிட்ட விடயத்தில் அக்கறை எடுத்து ரெலோ உறுப்பினர்களை குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் இருப்பவர்களை அறிவூட்டல் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.
தற்போதய ரெலோ கட்சியின் இயங்கு முறையானது மக்களுடன் தொடர்புபட்டதாக இல்லை என்பது வெளிப்படை !!!
எம்முடன் வாழ்ந்த இந்த தோழர்களுக்கான எனது/எமது குரல் தொடர்ந்து இருக்கும்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம்,
அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
30/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com

Thursday, 24 January 2019

கடிதம் 24, புலிகளினால் கொல்ப்பட்ட ரெலோ தோழர்களுக்கு ரெலோ நினைவாலயம் ஒன்றை அமைக்குமா?

கடிதம் 24, புலிகளினால் கொல்ப்பட்ட ரெலோ தோழர்களுக்கு ரெலோ நினைவாலயம் ஒன்றை அமைக்குமா? 
தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 29/01/2019, (கடிதம் 23, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
===========
புலிகளினால் கொல்ப்பட்ட ரெலோ தோழர்களுக்கு ரெலோ நினைவாலயம் ஒன்றை அமைக்குமா? எமது காரைநகர் மக்களின் சார்பாக கேட்கின்றேன் .
===========
புலிகளினால் கொல்ப்பட்ட ரெலோ தோழர்களுக்கு ரெலோ நினைவாலயம் ஒன்றை அமைக்குமா? அதற்காக செயலாற்றுமா? துணிவு இருக்கின்றதா?
காரைநகர் மக்கள் சார்பாகவும் கேட்கிறேன்.
நீங்கள் அரசுடன் உறவாடும் நிலையில் அதிக பணம் புழக்கம் கொண்டவர்கள் என்று பேச்சு அடுத் பாராளுமன்றில் செல்வத்துக்கு மந்திரி பதவி என்ற பேச்சு
தோழர்களை மரியாதை செலுத்துவீர்களா?
புலிகளினால் கொல்ப்பட்ட தோழர்களில் மிக அதிகமானோர் கரைநகரில் வைத்தே தகனம் செய்ப்பட்டது அதுவும் காரைநகர் மக்களால் அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது புலிகளை தடுத்திநிறுத்திய எமது காரைநகர் மக்களின்சார்பாக கேட்கின்றேன் .

புலிகளிடமிருந்து ரெலோ தோழர்களை காப்பாற்றிய காரைநகர் மக்கள் எனது மக்கள்எனது உறவுகள்சார்பாக கேட்கிறேன்.

இன்று பா.உறுப்பினர்கள் அரசில் இணக்க அரசியல் பிரமத மந்திரின் கையாட்கள்என்றெல்லாம் கூறப்படும் நிலையிலும் உங்களில் பலர் சொந்தமாக சொத்து திரட்டும் பணியில் மிக மும்மரமாக இருப்பதையேநாம் பாரத்து கேட்கின்றேன் இந்த தோழர்களையும் நினைத்துக் கொள்ளுங்கள்.
மக்கள் இந்த தோழர்களைமறக்காது இதற்கான வேலைகளழ நீங்கள்அரசில் உறவில் இருக்கும் இக்காலத்தில் செய்வதே சிறந்தாகும்.
நீங்கள்பலம் இழந்த காலத்தில் இவற்றை வைத்து அரசியல் செய்யாமல் இன்றே இந்த நினைவாலயத்தை அமைத்திடுங்கள்.
சரியான இடம் காரைநகர் வலந்தலை சந்தி இந்த இடத்திலேயே ரெலோ தோழர்களின்உடலங்களைகாரைநகர் மக்கள் புலிகளிடமிருந்து பெற்று தகனம் செய்தனர்.

கருத்துக்களை பகிர்ந்த காரைநகரை சேர்ந்த தம்பி தம்பிராசா மற்றும் தேவன் முன்னால் ரெலோ உறுப்பினர்களுக்கும் நன்றி.
எம்முடன் வாழ்ந்த இந்த தோழர்களுக்கான எனது குரல் தொடர்ந்து இருக்கும்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
28/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 23 -தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்.

கடிதம் 23, தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்த

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 28/01/2019, (கடிதம் 23, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
=======================================
தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்.
=================================================

புலிகளால் கொல்லப்பட்ட பல தோழர்களின் குடும்பங்கள் இன்றும் சீரழிந்த நிலையிலேயே வாழ்கின்றனர் அவர்களது குடும்பங்களை அவர்களது வாழ்வு நிலை பற்றி தமிழீழ விடுதலை இயக்கம் அக்கறையற்து இருப்பது வேதனையான விடயமாகும்.

இன்று நீங்கள் அரசின் எடுபிடிகள் இலங்கை அரசுடன்டஇணக்க அரசியல் செய்கின்றீர்கள் என்றால் இயக்கத்துக்கதாக தம்மை அர்ப்பணித்த தோழர்களினால் தான்என்பதை மறந்திருக்கினறுpர்கள் என்பத எனது குற்றச்சாட்டாகும்.

அண்மையில் ரெலோ தனது அரசியல் வெற்றிகளை பெற்று பிரதேசசபைகளில் பலரை பெற்றுள்ளபோதிலும் இந்த தோழர்களின் குடும் பங்கள்பற்றிய தகவலர்களைதிரட்ட தவறி அவர்களைப்பற்றி அக்கறையற்றதன்மைனை வெளிப்படுத்தி உங்கள்சுயநலங்களில் மட்டும் அக்கறை காட்டுவதை அவதானிக்கின்றோம் இது விடுதலை இயக்கம் என்ற பெயரின் இலக்கணத்துக்கு இழுக்கும் போராடிய தோழர்களை மறந்தது அறம் தவறியதேயாகும்.
புலிகளின்னால் கொல்லப்பட்ட பல தோழர்களின் உறவுகள் இன்றும் தமிழீழ விடுதலை இயக்கம் தம்மை ஒரு சொல் கேட்கவில்லை என்ற ஆதங்கத்துடனேயே வாழ்கின்றார்கள்.

இவர்களை தமிழீழ விடுதலை இயக்கம் அக்கறையுடன் மரியாதையாவது செய்யுமா? அவர்கிள்மிகவும் வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு உதவி செய்யுமா?
வட்டுக்கொட்டையில் புலிகளால் கொல்ப்பட்ட சங்கர்லால் அவர்களின் அப்பா சுகவீனமுற்று இருப்பதும் குடும்மபம் தமது கையேறு நிலையில் இருப்பதையும் முகநுhல்களில் பதிவுகள் வெளிவந்திருந்தது. இதன் பிறகும் கூட ரெலோ இந்த குடும்பங்களை அக்கறையற்று விட்டடிருப்பது போராடிய இனம் என்று கூறமுடியுமா ? அல்லது ரெலோ போராடிய இயக்கமா?

குறைந்த பட்சம் இந்த தோழர்களின் உறுவுககளுக்கு மரியாதையாவது செலுத்துங்கள்.
இந்த உறவுகள் இறந்த பின்னர் அவர்களது உடலுக்கு மரியாதை செலுத்துவதை விட வாழும் போதே அவர்களிடம் பேசுங்கள் அத்துடன் அவர்கள் வாழும் போதே அவர்களது பிள்ளைகளின் அர்ப்பணிப்பை அர்தத முள்ளதாகக்குங்கள்.

அவர்கள் தமது பிள்ளைகள் ரெலோவினால் மரியாதை செலுத்தப்படுவதை உணரவையுங்கள்.

எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
28/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

Saturday, 19 January 2019

கடிதம் 22, தலைவர் சிறீசபாவை கொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கம்.

கடிதம் 22, தலைவர் சிறீசபாவை கொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கம்.
 தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 28/01/2019, (கடிதம் 24, மாதம்01, கிழமை 04)

தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,

தலைவர் சிறீசபாவை கொலை செய்த தமிழீழ விடுதலை இயக்கம்.
==================
ரெலோ தோழர்கள் கொல்லப்பட்ட பின்னர் ரெலோ ஒளித்தும், ரெலோவில் சிலர் புலிகளின் சீலைக்குள் படுத்திருந்த போதும் ரெலோ லண்டன் லண்டனில் புலிகள் இருக்கும் போதே நினைவு தினங்களை அனுட்டித்தோம். 

ரெலோ தோழர்களில் பலரும், லண்டனில் புலிகளின் வால்-காவாலிகளின் எதிர்ப்புக்கும் மத்தியில் ரிபிசியில் செய்திருந்தோம் இன்றும் நாம் ரெலோ லண்டனே அவர்கள் மீது அக்கறையுடையவர்களாக உள்ளோம், கஞ்ச-லஞ்ச ஊழல் பதவி ஆசைக் கூட்டம் லண்டனில் ரீ-வடை குறுப்பை வைத்து தமது பதவிக்காக பேய்க்காட்டுகின்றது.

புலிகளின் அர்ப்பணிப்பு கொண்ட உறுப்பினர்கள் எமது எதிர் கருத்தை ஏற்றிருந்தனர் என்பது குறிக்கப்பட வேண்டும்.
லண்டனில் இயங்கும் இந்த ரீ-வடை குறுப் பிரித்தானிய சட்ட திட்டங்களுக்கு முரணாகவே இயங்கும், நிதிகையாளும் சாம் குறூப், இது போராடிய 1969 ஆண்டு ஆரம்பித்த தாய் விடுதலை இயக்கத்திக்குரிய எந்த குணாம்சத்தையும் கொண்டிராத கூட்டம், இது வரையில் முன்னால் ரெலோ உறுப்பினர்கள் தவிர மற்றவர்களை அணுகாத குறூப்.
ரெலோ சார்ந்த உறுப்பினர்களது செத்தவீடு,31ம் நாள் பூசைவீடு, தண்ணி அடாச்சு கூத்தாடுற birthday party, சாமத்தியச் சடங்குகள் இவைகளில் கலந்து கொண்டபின் கூடியிருந்து ரிவடை பேசும் அரசியல் குறுப், யார் நம்புவார்கள், மக்கள் அமைப்புக்கு ஒரு வரையறை உள்ளது தெரியாத மொக்கன்கள் கூட்டம்
இவை பற்றி எனது blog ல் கடிதங்களாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.

த சோதிலிங்கம்.
21/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 21, தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

கடிதம் 21, தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே !!!--------தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 24/01/2019, (கடிதம் 22, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
===========
ரெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே !!!
===============
தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஒரேஒரு தலைவர் சிறீசபாரத்தினம் மட்டுமே, இவர் முதலிசமூகத்தை சேர்ந்த உயர்சாதியினன் என்ற காரணமே கொல்லப்படக் காரணமாகியது, ரெலோ உள்ளேயும், புலிகளின் அனுசரணையுடன் வடமராட்சியை சேர்ந்த சிலரின் தூண்டுதலினாலும் இக் கொலை நடந்தேறியது.
1984 ம் ஆண்டு சுதன் -ரமேசு தலைமையில் ஒரு கொலைமுயற்சி முறியடிக்கப்பட்ட போதும் 1986 ம் ஆண்டு இவர்கள் எல்லோரும் சேர்ந்து புலிகளை பாவித்து கொலையை ஒப்பேற்றினார்கள்.

இதுவே தமிழர்களின் இன்றய இழிநிலைக்கு வழிவகுத்தது.
1982ம்ஆண்டுக்pகு பின்னர் ரெலோ இயக்கத்தை 1986 வரையில் அன்றய காலத்துடன் இணைத்து வளர்த்தெடுத்த பெருமை சிறீ சபாரதத்தினத்தின் தலைமையே இதனi ஏற்றக்க மறுத்தவர்கள் ரெலோவின்உள்ளேயும் வெளியேயும் இயங்கியரெலோ தலைவரை கொலை செய்தாவது ரெலோவிள் வளர்சியை தடுத்தனர்.
தமிழர்களின் உரிமைகள் இந்தியாவின் ்அனுசரணையின்றி பெயமுடியாது என்ற யதாரத்தத்தை முன்னெடுத்தவர் சிறீசபாரத்தினம் அவர்களாகும்.
இந்தியாவின் உதவியின்றி தமிழர் அரசியல் உரிமைகளை பெறமுடியாது என்பது தமிழ் தலைமைகளின் நீண்டகால பொது முடிவின் பின்னர் இந்தியாவிடம் உதவி கோரப்பட்டது, இந்தியாவின் தென்பகுதி பாதுகாப்பு நலனுக்குட்பட்டு தமிழரின் அரசியல் உரிமைகளையும் வென்றெடுப்பது என்ற தமிழர்களின் எதிர்பார்ப்பை இந்திய இராணுவத்தின் வருகையுடன் ஒப்பேற்றியிருப்பதே !!!

சிறீசபா இல்லாத போதும் eprlf அதை முன்னெடுத்திருந்தது.
மீண்டும் இந்தியாவின் அனுசரணையின்றி இலங்கையில் தமிழர் அரசியல் உரிமைகளை பெறமுடியாது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதே தேவை, சிறீசபாரத்தினத்துக்கு முன்பும் பின்னரும் தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு தலைமைத்துவம் இருக்கவில்லை.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
21/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 20, நமக்காக நாம்-தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 20, நமக்காக நாம்-தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 21/01/2019, (கடிதம் 21, மாதம்01, கிழமை 04)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.
====================
நமக்காக நாம்
===================
தமிழீழ விடுதலை இயக்கத்தின் மக்களுக்காக இயங்கும் தோழர்களில் யார் என்ற தேடலில் சுவிசில் சேகர் தலைமையில் இயங்கும் நமக்காக நாம் என்ற அமைப்பை இங்கு குறிப்பிட்டு குறிப்பிட்டு இக் கடிதத்ததை எழுதலாம் என்நினைக்கின்றேன்.
தலைவர் சிறீசபாரத்தினத்தை முன்னிறுத்தாத தமிழீழ விடுதலை இயக்கத்தை தமிழ் மக்கள் ஒரு போராடட இயக்கமாக பார்க்கமாட்டார்கள் என்பதை கவனம் கொள்ள வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில் பல ரெலோவின் கிளைகள் - பிரித்தானியா> சுவிஸ் பிரான்ஸ்> கனடா ஜேர்மன் ஆகியநாடுகளில் ரெலோ இயங்கின்றது என்பதை ஊடகங்களிலும் ரெலோவின் வைபர் குறூப்புக்களிலும் உல்லாச கதையளப்பில் பார்க்கின்றேன்.
ஒவ் நாடுகளிலும் அநேகமாக இரு அல்லது அதற்க்கும் மேற்ப்பட்ட பிரிவுகள் இயங்குகின்றன அவர்களுக்கிடையே சர்சரவுகளும் குழப்பங்களும் ஒருவரை யொருவர் கேலி பண்ணுவதும் குறைகூறுவதுமாக இவர்களது கதையளப்பு இருக்கின்றது இந்த கதையளப்பை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக காண்கின்றபோதிலும் இவர்களில் தமிழீழ விடுதலை இயக்கமாக இயங்கியவர்கள் ஒரு சிலரே ஏனையோருக்கு இயக்கம் அரசியல் மக்களுக்கான தொடர்புகளில் உள்ள குழப்பம் அறிவின்மை இவர்களை மிகவும் முரண்பட்டவர்களாக வைத்திருக்கின்றது, அல்லது பொருட்படுத்தாத இயக்கத்தை கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பிரிவுகளிலும் ஒருசிலராவது மிகவும் தெளிவு கொண்டோராக இருப்பதும் உண்மையே> மேலும் சிலர் தமது அன்றயபுழுகு மூட்டைக்காகவே கூட்டங்கள் ஒன்று கூடல்களுக்கு வருகின்றார்கள் என அந்த கூட்டங்களில் இருக்கும் உறுப்பினர்களில் சிலரது கருத்தாகவும் இருக்கின்றது.
இவ்வளவு பிரச்சனைகளுக்கும் சுவிஸ்சில் இயங்கும் நமக்காக நாம் அமைப்பு இலங்கையில் பலவேறு உதவிகளை மக்களுக்கு நேரடியாக செய்து கொண்டிருக்கின்றது.
அது மட்டுமல்ல நமக்காக நாம் அமைப்பு முன்னாள் ரெலோவினர் மட்டுமல்ல இதர இயக்கங்களில் இருந்தவர்களையும் இணைத்து இலங்கையில் ரெலோவின் முன்னாள் உறுப்பினர்கள் புலிகளால் கொல்லப்பட்ட ரெலோ தோழர்களின் பிள்ளைகள் என பல்வேறு வகையினரையும் இணைத்து இயங்குகின்றது.
இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விடயம் நமக்காக நாம் போராட்டத்தில் தொலைத்த சிறீசபாராத்தினத்தின் அடையாளத்தை தொடர்ந்து இலங்கையில் நிலை நிறுத்தும் அமைப்பாக இயங்குகின்றது, பலவேறு கிராமங்களில் சிறீசபாவை எடுத்துச் சென்றுள்ளனர்.
கடந்த பல வருடங்களாக நமக்காக நாம் அமைப்பினரது நடவடிக்கைகளை ரெலோ சர்வதேசம் அமைப்பு எனும் சமூக வலையில் வெளியிட்டிருந்தது,
அவர்களது ஒவ்வொரு மக்கள் தொடர்பிலும் தலைவர் சிறீசபாரத்தினம் அடையளத்துடன் தமது சேவைகளை செய்து வருக்கின்றார்கள் இந்த அமைப்புடன் கடந்த காலங்களில் புலிகளினால் கொல்லப்பட்ட தலைவர் சிறீசபாரத்தினம் ஒரு வரலாற்று தவறு என உணர்ந்த அல்லது நாம் தமிழர்கள் எம்மிடையே மோதி அழிந்து கொண்டோமே என உணர்ந்த இருதரப்பினரும் இணைந்து இந்த இயக்கத்தை நடாத்துவது நல்ல முன் உதாரணமாகும்.
அது போன்ற பல்வேறு தரப்பினரை இணைத்து அரசியலிலும் மக்கள் உதவித் திட்டங்களிலும் இயங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் ஆனால் இலங்கையில் ரெலோ அல்லது இதர நாடுகளில் ரெலோ இது போன்ற முயற்ச்சிகளை முன்னெடுக் தெரியாது இருக்கின்றார்கள்.
புலம் பெயர்நாடுகளில் குறிப்பாக லண்டனில் வெறுமனே ரி-வடை கூட்டங்களை நடாத்தி விட்டு காலத்ததை வெற்றாக ஓட்டுகிறார்கள். புலம் பெயர்நாடுகளில் குறிப்பாக லண்டனில் ரெலோ இயங்கு முறையும் விசேடமாக லண்டன் ரெலோ இயங்கு முறையும் இவர்களது மனநோய்கள் பற்றியும்.தனித் தனி கடிதமாக வெளிவரும்.
ரெலோ சுவிஸ் கிளை அமைப்பின் நமக்காக நாம் அமைப்பினர் க டந்த காலங்களிலும் இனிவரும் காலங்களிலும் திட்டமிடப்பட்டுள்ள உதவி வழங்கல்கள் கிளிநொச்சி முல்லைத்தீவு சாவகச்சேரி .கல்லூரிகள் மன்னார் யாழ்ப்பாணம் பூநகரி கொக்குத் தொடுவாய் என பல இடங்களில் முன்னாள் ரெலோ போரிகளுடன் இணைந்து நிற்கின்றார்கள்.
இது போன்ற மக்களுக்குஉதவி செய்யும் அமைப்புக்களை இதர புலம்பெயர் நாட்டு கிளைகளும் செய்ய இயங்க முன்வர ரெலோவின் தலைமை ஆழுமையை செலுத்த வேண்டும்.
-------------------------------------
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
21/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.

கடிதம் 19, (1)தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 18/01/2019, (கடிதம் 19, மாதம் 01, கிழமை 03)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை.

தமிழீழ விடுதலை இயக்கமும் இலங்கையில் முன்னாள் போராளிகளும்.
===============

நான் இந்த தலைப்பை இடுவதற்கான காரணம் இலங்கையில் தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டி வளர்த்த தோழர்களின் கருத்துக்களிலிருந்தும், அவர்களின் இன்றய வறுமை நிலைமைகளிலிருந்துமேயாகும்.
எந்தவித உதவிகளும் இன்றி கடின உழைப்பிலும் போதாமையுடன் வாழ்வு வாழ்கின்றார்கள், தாம் இந்த கடின வாழ்வை புலிகளின் கொலைகளைத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருப்பதாயும், தமது சுய முயற்சியிலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை கெளரவத்துடன் கூறுகிறார்கள்.
"நாம் மிகவும் அதிகமாக இயக்கம் பற்றி சிந்தனையுடன் வாழ்ந்து விட்டோம் ", போராட்டம் தோற்றது ஒருபக்கம் மக்களின் இழப்புக்கு பின்னரும் ரெலோ தமது மக்கள் பற்றிய சிந்தனையற்றே இருக்கின்றது என்பதே அவர்களது கருத்தாகும், இயக்கம் என்பது, அரசியல் கட்சி என்பது இதுவா சீ , சீ ஒரு விடுதலைப் போராட்டவாதிகள் என்பதற்க்கு அவமானம்.
முன்னாள் போராளிகளில் பலர் இன்றும் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்கின்றார்கள், பலரை ரெலோ முன்னணி உறுப்பினர்கள் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டு போகிறார்கள்.
இவர்களை நம்பி இவர்களுடன் இயக்கத்தில் இருந்தோம் எம்மை இழந்தோம், என முன்னாள் ரெலோ உறுப்பினர்கள் கூறுகிறார்கள்.
இது ஏன் ?
இந்த முன்னாள் ரெலோ உறுப்பினர்களுடன் அமைதியாக, ஆறுதலாக பேச முடியாது என்றால் நீங்கள் எப்படி அப்பாவிகள், ஏதிலிகளாக உள்ளவர்கள், நலிந்த பொது மக்களுடன் பேசுவீர்கள்.
நீங்கள் மக்களுக்காக அரசியல் செய்கின்றோம், கட்சி நடத்துகின்றோம் என்று கூறுவதை நம்பமுடியுமா?
முகநுாலிலும் , தனிப்படவும் பல தோழர்கள் ரெலோ பற்றிய வெறுப்புடன் கொதிப்புடன் இருக்கிறார்கள், இவர்கள் யாபேரும் உங்களுக்கு பக்கத்திலேயே உங்கள் இலங்கை பிரசைகளாகவே, உங்களுக்கு வாக்களிப் பவர்களாகவே வாழ்கின்றார்கள்.
நீங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் கடந்த காலத்தில் ரெலோவில் இயங்கியவர்களின் பெயர் விபரம் இன்னும் தயாரிக்க வில்லை என்றால் எப்படி மக்களுக்காக இயங்குகின்றீர்கள் என நம்புவது ?
கடந்த பல பல வருடங்களில் உங்களால் செய்யப்பட்ட மக்களுக்கான தினக் குறிப்புக்களை வெளிப்படுது வீர்களா ?
கட்சி, இயக்கம் மக்களினது மக்களுக்கு உங்கள் கடமைகளை வெளிப்படையாக முன்வைப்பீர்களா ?
இயக்கம், கட்சி என்பது தொழில் அல்ல மக்களை ஒருங்கிணைத்து மக்களுடன் இணைந்து மக்களுக்காக இயங்குவதே ஆனால் இன்று ரெலோ ஒரு அரசியல் சந்தர்ப்பவாதிகளாக தேர்தலுக்காக மட்டும் சென்று வாக்கு கேட்டு விட்டு மக்களை மறக்கும் மிதவாதிகளாகவே இயங்குகின்றீர்கள்.
இச் செயலுக்காக இயக்கம் கட்டப்படவில்லையே! , இச்செயலுக்காக இயக்கத்துக்கு உறுப்பினர்கள் தம் உயிரை அர்ப்பணிக்க வில்லையே !
தமிழீழ விடுதலை இயக்கத்தை புலிகளிடமிருந்து பாதுகாத்த பலர் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள், இயக்கத்துக்காக எமக்கு உதவிசெய்த பலர் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் இவர்களுக்கு இவர்களது மரணத்துக்கு முன்பாவது ரெலோ தனது நன்றியை தெரிவிக்குமா ???
உதாரணத்துக்கு புலிகளால் வட்டுக்கோட்டையில் கொல்லப்பட்ட பல தோழர்களில் ஒருவர் சங்கர்லால் அவரது கொலையினால் பாதிக்கப்பட்ட குடும்பம் 1986 லிருந்து இன்றும் கடின வாழ்வில் இருக்கிறார்கள் சங்கர்லால் பெயரால் தம் கெளரவத்துக்கு இழுக்கு வராமலும் வாழ்கிறார்கள்,
இது அவர்களது நிலைப்பாடு நீங்கள் ரெலோ மக்களுக்காக இயங்குகிறோம் என்பவர்கள் இந்த தோழர்களின் குடும்பத்தை ஒரு கணம் சிந்திக்க வேண்டாமா ? சங்ஙர்லால் போன்ற போன்ற பல தோழர்கள் பயிற்சி முகாம்களில் "நாம் போராட்டத்தில் இறந்தால் எமது இயக்கம் எமது குடும்பத்தை பாதுகாக்கும் என்று கூறியது உங்களுக்கு ஞாபகத்தில் இல்லையா ???
இவன் போன்ற தோழர்களின் குடும்பங்களை, முன்னாள் போராளிகளை நீங்களாக போய் ஏன் பறையக் கூடாது? அவர்களது நலம் விசாரிக்க கூடாது? தேவைகளுக்கு உதவக் கூடாது?
தோழர் சங்கர்லால் இறுதியாக சந்தித்த போது தனக்கு மிகவும் பிடித்தமான சேட்டை எனக்கு தந்து வெளியிடங்களுக்கு போக அனுப்பிய ஞாபகத்தையும் இணைத்து பதிவிட விரும்புகிறேன்.
இயக்கத்தில், பயிற்சி முகாம்களில் இந்தியாவில் , சென்னையில், சேலத்தில், காஞ்சிபுரத்தில் ஒன்றாக வாழ்ந்த தோழர்களை இப்படி கைவிடலாமா???
திட்டமிடலில், வாழ்விலும், வெற்றியிலும், போராட்ட துன்பத்தில் பங்கு கொண்ட தோழர்களை மறப்பது மனிதாபமா???
மக்களுக்காக இயங்கும் நீங்கள் உங்களுடன் இணைந்திருந்தவர்களை கைவிட்டு, குடும்பங்களை ஏதிலியாக்கி விட்டு இன்று அரசியல் கட்சி என்றும் புதிய உறுப்பினர்கள் என்றும் இருப்பதற்க்கு அத்திவாரமிட்ட தோழர்களை தவிக்க விடலாமா ??
அவர்களுக்கு துரோகம் பண்ணலாமா?
அவர்கள் ஏன் தமது உயிரை அர்ப்பணித்தனர்?
முன்னாள் தோழர்கள் எனப்படுவோரை நீங்கள் என்ன பாவித்து விட்டு எறிவதா தோழமை என்பது, தோழர்கள் என்பது, இவர்களுடன் போய் அமைதியாக பேசமுடியாத நீங்கள் விடுதலை இயக்கமா?
நிச்சயமாக நீங்கள் உங்கள் தனிப்பட்ட சுயலாபங்களுக்கே இயங்குகின்றீர்கள் இதை மறுதலிப்பதாயின் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள், உங்கள் பக்கத்தே அவர்களும் வாழ்கின்றார்கள்.
"சிந்தியுங்கள்"
இவ் விடயங்களை உள்ளடக்கிய ரெலோவாக ரெலோ அமைப்பியலை, இயங்கியலை திருத்தியமைத்து இயங்க முடியாதா ? என்ன?
புதிய உறுப்பினர்கள் உங்களை நம்ப வேண்டுமா?
மக்களுக்காகன இயக்கமா?
மக்களுக்காகன அரசியலா?
எப்படி என்று முன்னாள் போராளிகளுக்கு உங்களை புரியவையுங்கள்.
இந்த தோழர்களுடன் பழகி வாழ்த தோழர்களில் பலர் தாம் இயக்கம், கட்சி எனப் பெருமை பேசிக் கொண்டிருப்பவர்கள் இந்த தோழர்களை சிந்திக்க வேண்டும் அந்த தோழர்களுக்கு உதவவும் இயங்க வேண்டும்.
===================
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல.

நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
18/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்: uktelo@gmail.com, telolondon@gmail.com

Friday, 18 January 2019

கடிதம் 19, தமிழீழ விடுதலை இயக்கத்துக்கு கடிதம்.

Tuesday, 15 January 2019

கடிதம் 18, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 18, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.
"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"
எழுச்சி, 16/01/2019, (கடிதம் 18, மாதம்01, கிழமை 03)

திரு செல்வம் அடைக்கலநாதன் (பா.உ),(பிரதி அமைச்சர்)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை பாராளுமன்றம்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,
இலங்கை.

தங்களால் அண்மையில் ஏற்ப்படுத்தப்பட்ட மாற்றம்-திருத்தத்தை சர்வதேச குழுவை கலைத்தமையை வரவேற்கிறேன்.
புலம்பெயர் நாடுகளில் ரெலோ என்ற பெயரில் மக்களையோ உதவிகளுக்கான தேடல்களையோ செய்யாது ஒரு ரீ வடை குறுப்புக்களாக மேலும் ஒரு காவாலிகளின் நடத்தைகளாக இயங்கிக் கொண்டிருந்தவர்களை அவர்களது புத்திசுவாதீனமான நிலைக்கு இறக்கி விட்டு, அவர்களை மக்களுக்காக சிந்தி அல்லது ஒதுங்கி நில் நிலைமைகளை உருவாக்கி ரெலோ கட்சி தன்னை சீரமைத்துக் கொண்டுள்ளும் முயற்சியாகவே நான் கருதுகிறேன்.
கடந்த காலங்களில் இவர்களின் நடத்தைகள் பற்றி விசேடமாக uk யில் நடத்தைகள் பற்றி ஆயிரத்தில் ஒரு கடிதமாக, எனது அனுபவமாக நிச்சயம் வெளிவரும்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்களை புலிகளுக்கு பின்னர் இலங்கை தமிழ் மக்களுக்கான இயங்கும் வல்லமை கொண்ட அமைப்பினூடாக கட்டமைப்பை உருவாக்க தவறி விட்டீர்கள், இதை இனிமேல் உருவாக்குவது என்றால் நிறைய பிராயச்சித்தங்களை செய்ய வேண்டியிருக்கும், நிறையவே பதவி
நிலைகளிலுருந்து சாதாரண மக்கள் நிலைக்கு இறங்காது எந்த கட்சிகள் இயக்கங்களாலும் செய்ய முடியாது.
கட்சி மக்கள் அமைப்புக்களாக மாற வேண்டியிருக்கும்.
1980களில் ஒரு இயக்க உறுப்பினரை உள்வாங்கும் போது அவரை எத்தனை முறை சந்தித்து பேசினோம், எத்தனை தடவைகள் போராட்டம் பற்றி பேசியிருந்தோம், என்ன விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என கூறியிருந்தோம் இது போன்றதொரு பயிற்சியை மேலும் ஒருமுறை இலங்கையில் தமிழ் மக்களின் ஐனநாயக மேம்பாட்டிக்காக செய்யவேண்டும், அதே போன்று புலம்பெயர் தேசத்திலும் தமிழ் மக்களை அவர்கள் வீட்டில், கோயில்களில், பொது இடங்களில் சந்தித்து பேசி மக்களுக்காக அணிதிரட்ட வேண்டியுள்ளது.
இது மக்களுக்காக இயங்க விரும்பும் இயக்க உறுப்பினர்களின் கடமையாகவும் இருக்கும் இதனூடாக இலங்கையில் தமிழ் மக்களுக்கு உதவிபுரியும் அமைப்பாக, உப அமைப்பாக இயங்க வேண்டும், இதுவே ஒரே வழியும் ஆகும்.
புலம்பெயர் நாடுகளில் ரெலோ உறுப்பினர்களின் நடவடிக்கைகள் என்ன? ரெலோ அரசியல் கட்சியில் உறுப்பினராக இருப்பதாயின் அவர்களின் கடமைகள் என்ன? பொறுப்புக்கள் என்ன? இலங்கை தமிழ் மக்களை நோக்கிய அவர்களது செயற்பாடுகள் என்ன?, கடந்த காலங்களில் இவர்கள் என்ன பொறுப்பு மிக்க கடமைகளில் ஈடுபட்டார்களோ அதன் பிறகு ரெலோவின் விசேட புலம்பெயர் உறுப்புரிமைகள் வழங்கப் படலாமே தவிர இலங்கையில் இலங்கை சட்டப்படி இயங்கும் கட்சியின் உறுப்பினர்க்கு ஐரோப்பிய நாட்டு பிரசைகளுக்கு கொடுப்பதன் மூலம் வேறு சிக்கல்களையே தோற்றுவிக்கும், இது புலம்பெயர் நாட்டு நீதிமன்றுக்கு ரெலோ பதில் வேண்டிய நிலைகளை தோற்றுவிக்கலாம் என்பதை மனதில் கொள்க !!!
புலம் பெயர் ரெலோக்களில் பலர் பொறுப்புணர்வற்ற செயல்கள், பேச்சுக்களிலேயே காலத்தை கடத்தி இன்று ரெலோ இலங்கையில் எடுத்த முடிவினால் தங்களின் காவாலித்தனங்கள் அடக்கப்பட்டதை உணர்கின்றார்கள், இது பொறுப்பு வாய்ந்த telo ambassador களை உருவாக்கும் என நான் நம்புகிறேன் அது மட்டுமல்ல ரெலோவின் தலைமைத்துவத்தையும் உயர்த்தும் எனவும் நம்புகிறேன்.
அதேவேளை எனது எழுத்துக்கள் பற்றி கேள்விகள் எழுப்பியவர்களுக்கு எனது பதிலையும் விரைவில் பதிவு செய்வேன்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
16/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்: uktelo@gmail.com, telolondon@gmail.com

Thursday, 10 January 2019

கடிதம் 17, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

கடிதம் 17, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வத்துக்கு கடிதம்.

"த சோதிலிங்கம் எழுதும் ரெலோவுக்கு ஆயிரம் கடிதங்கள்"

எழுச்சி, 14/01/2019, (கடிதம் 17, மாதம்01, கிழமை 03)

திரு செல்வம் அடைக்கலநாதன் (பா.உ),(பிரதி அமைச்சர்)
தலைவர்
தமிழீழ விடுதலை இயக்கம்,
இலங்கை பாராளுமன்றம்,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு,
இலங்கை.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் இலட்சினை போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடமை.

அண்மைக் காலங்களில் தங்களால் இயக்கத்தின் தலைவராக வெளியிடப்பட்ட கருத்தை மறுதலிக்க விரும்புகிறோம்.
ரெலோவின் சின்னம் இலங்கை அரசுக்கு எதிராக போராட எழுந்த தங்கத்துரையின் தலைமையில் உருவான இயக்கத்தின் சின்னம், இந்த சின்னம் இலங்கை அரசில் அங்கம் பெற்று பதவிக்காகவும் , புகழுக்காகவும், லஞ்சத்திற்க்கும் பாவிப்பதற்க்காக உருவாக்கப்பட்ட சின்னம் அல்ல, அண்மையில் தாங்களாள் வெளியிட்டப்பட்டதாக ஊடகங்களில் வரும் கருத்து, இச்சின்னத்தை பிரான்சு,ஐேர்மனியில் ரெலோ அமைப்பின் கிளைகளாக இயங்கும் உறுப்பினர்களினால் பாவிக்க முடியாது என வெளியிடப்பட்ட கருத்தை நாம் தமிழீழ விடுதலை இயக்கத்தை கட்டியெழுப்பிய, போராடிய, சிறை சென்ற முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

ரெலோவின் ஆழுமையற்ற தலைமைத்துவத்தின் (தலைவரின் அல்ல) வெளிப்பாடேயாகும்.
இயக்கத்துக்காக உழைத்தவர்களை இவ்வாறு அவமானப்படுத்துவது விடுதலை இயக்கம் என்ற பெயருக்கு அவமானமாகும். அவர்கள் தமிழீழ விடுதலை இயக்கத்தில் இன்றர உறுப்பினர்களோ இல்லையோ என்பதல்ல முக்கியம் அச் சின்னம் யாரும் பாவித்து விடுதலை இயக்கத்தின் தமது அனுபவத்தை தெரிவிக்கும் உரிமையுண்டு, இல்லை இதை மறுதலித்து இலங்கையில் சட்ட நடவடிக்கை என நீங்கள் தெரிவு செய்தால் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அச் சின்னம் இலங்கை அரசின் ஒடுக்கு முறைக் கெதிரான சின்னம் பற்றி இலங்கை அரசிடம் நீதி கேட்டு போவது பற்றி தங்ஙத்துயையின் நீதிமன்ற உரையை மீள வாசியுங்கள்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் சின்னம் இன்றய புதிய சின்னத்தை இன்று நீங்கள் கோரினாலும் பழைய ஆரம்பகால சிற்னத்துக்கும் எமக்கும் நிறையவே உரிமையுண்டு.
உதாரணமாக அச்சின்னத்தை கொண்ட பத்திரிகையை, அச்சின்னத்தின் இயக்கத்துக்காக இயங்கியவர்களை இலங்கை நீதிமன்றம் தனது நாட்டுக்கு எதிராக இயங்ஙியவர்களாகவே கருதி இலங்கை சட்டப்படி பல வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.
அந்த இலங்கை நீதிமன்றமே மீள அவரை பாவிக்க வேண்டாம் என உத்தரவு போடுமானால் பரிகாசம் வேறு இருக்காது.

தமிழீழ விடுதலை இயக்கம் என்பது ஒன்று, தமிழீழ விடுதலை இயக்க கட்சி என்பது இன்னொன்று, கட்சியில் அங்கம் வகிக்காதவர்கள் இயக்கம் மட்டுமே அது அவர்கள் இறக்கும் வரையில் அவ் இயக்கமே, ஆனால் நீங்களும் பலரும் இன்று தமிழீழ விடுதலை இயக்க கட்சியும் அதன் தேர்தல் வாக்கு பிச்சை கேட்குப் சின்னம் வெளிச்ச வீடு உடன்படுகிறேன் வெளிச்ச வீட்டை யாரும் பாவித்தால் இலங்கை நீதிமன்றம் பாவிக்க வேண்டாம் எனகோர முடியும். அது இன்று கட்சியில் சிலரது உழைப்புக்கான கம்பனி logo என்பதில் மாற்று கருத்து இல்லை.

கருத்து பகிர்வு, இயக்க உரிமை, கட்சி உறுப்புரிபை போன்ற விடயங்களில் மிகவும் குழப்பமாகவே கருத்து வெளியிடுவது புத்திசாலித்தனமானது அல்ல.
கருத்து பகிர சந்தர்ப்பம் ஏற்ப்படுத்தியமைக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
கருத்து சுதந்திரத்தின் ஆழமான உரிமைகளை கட்சி உறுப்பினர்களும் புரிந்து கொள்வது அல்லது புகட்டுவது அவசியமானது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக "தமிழீழ விடுதலை இயக்கம்"(கட்சி அல்ல) தொடர்ந்து இயங்க வேண்டும், அல்லது இயங்க ஊக்குவிப்புக்கள் வழங்க வேண்டும், அந்த ஐனநாயக போராட்டம் இலங்கையில் இயங்குவதே தங்கத்துரை குட்டிமணி சிறீசபா போன்றோருக்கும் அவர்கள் மதித்த தமிழ் மக்களுக்கு செய்யும் நன்றிக் கடனாகும்.
நீங்கள் குறிப்பிடும் வைபர் குறுப்புக்களை உங்களின் கையாட்கள் லண்டனிலிருந்து telo மத்தீய கமிட்டி உறுப்பினர்களை அவற்றை நடாத்தி அதன் மூலம் பிரித்தானிய பிரசைகளை மிரட்டியுள்ளது பொலீசுக்கு அவர்கள் பெயர் விலாசம், தொலைேசி எண்கள் வழங்கப்பட்டு பதிவு செய்யப்பட்ணுள்ளதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்.
எதிர்கால சந்ததியிடம் எமது தோல்வியை ஏற்று இறப்போம், அது வரையில் எழுதுவோம்.
நாம் மக்களுக்காகவே போராட்டத்தில் இணைந்தோம் இயக்கங்களுக்காக அல்ல !!!
நன்றி.
முன்னாள் ரெலோ தோழர்கள் மற்றும் ரெலோ தோழர்கள் சார்பில்.
த சோதிலிங்கம்.
14/01/2019
0784 6322 369
இக்கடித கருத்துக்களை ஆதரிக்கும் ரெலோ தோழர்கள்
தமிழீழ விடுதலை இயக்கம்
(UK, France, Swiss, Germany, Canada, Italy, Saudi, Qatar)
தொர்புகள்:
uktelo@gmail.com, telolondon@gmail.com

விசாரணை, கேள்வி,தர்க்கித்தல், விவாதித்தல், விமர்சித்தல் இவை மூலமே சமுகம் முன்னேற்ற மடையும்.

விசாரணை, கேள்வி,தர்க்கித்தல், விவாதித்தல், விமர்சித்தல் இவை மூலமே சமுகம் முன்னேற்ற மடையும்.
--------------------------
சரி பிழை எது? என்ன? என்பவை விசாரித்து ஆய்வு செய்யப்படல் வேண்டும் பத்திரிகைகள் தவறு என்றால் பத்திரைகள் மீது கண்டனம் எழுப்பப்படல் வேண்டும்.சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தப்படல் வேண்டும்.
போலித் தேசியம் பேசும் கட்சிகளான ரெலோவும் தமிழரசும் அரசியலா செய்கின்றது,
இவர்களுக்கு அரசியலுக்கும் வாழ்வுக்குமான தொடர்பு புரியவில்லை
எங்கே லஞ்சம் கிடைக்கும் என நாக்கை தூங்க விட்டு திரிகின்ற நாய்கள்.
கஞ்சா ஊரில் விற்க்கப்பட்ட சிட்டுக்குருவி, மதன லேகியமக போன்ற லேகியங்களிலும் இருந்தது.
கஞ்சா கெட்ட பொருள் அல்ல, எதுவுமே அளவுக்கு மீறிறால் அமிர்தமுமக நஞ்சே,
ஆசியர்கள் சோறு சாப்பிடுவது போல் கஞ்சாவை பாவிப்பதே தவறு, எப்படி குடித்தல் தவறு என வந்ததோ அதே போல் , சமுக கட்டமைக்கப்பட்டுள்ள முறை, சட்டம் சமூக வழக்கம், தலைமைத்துவம் இல்லாத சமூகம்,
இவைகளே எமது பிரச்சனைகள்.
தமிழரின் கோவிலை உடைத்து மசூதி கட்டியவன், சட்டத்தை தனது கையில் தனது விருப்பப்படி மோசடி செய்தவன், தனக்கு சார்பாக நீதிபதி தீர்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக தனது அதிகாரங்களை பயன்படுத்தி நீதிபதியை மாற்றியவன்.
இவ்வளவையும் தானேசெய்தது என பொதுவில் கூறியவன்,
தமிழர் விரோதி மதசார் அடிப்படைவாதி கிழக்கு மாகாண ஆளுனர்.
தமது எதிர்ப்பை அரசுக்கு தெரிவிக்காத தமிழரசு, ரெலோ என்ன பகல் கனவா கண்டுகொண்டிருக்கின்றது அல்லது உங்களுக்கும் கிசுபுல்லா லஞ்சம் தந்து விட்டானா ?
ஆளுனர் கிசுபுல்லாவின் தமிழ் விரோதமும் இசுலாமிய விரிவாக்கமும்.
தமிழர் தரப்பு குறிப்பாக தமிழரசு, ரெலோவுக்கு இசுலாமியர்களால் லஞ்சம் கொடுக்கப்பட்டே இந்த ஒப்பேற்றல் நடைபெறுகின்றது. என ரெலோ மத்திய கமிட்ணி உறுப்பினர் கூறினார்.
தமிழ் மக்களுக்காக பெளத்த துறவிகளே பேசுகின்றனர், தமிழ் தலைவர்கள் அல்ல, அவர்கள் முசுலீம்களிடமிருந்து லஞ்சம் பெற்று தமது குடும்பத்தை மட்டும் பேணுகின்றனர்

தோழர் சுந்தரம் 37வது நினைவுதினம்!

தோழர் சுந்தரம்

===============தோழர் சுந்தரம் 37வது நினைவுதினம்!

"புதியபாதை "ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 37வது நினைவுதினம் இன்றாகும்.
1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலை புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும்.
தோழர் சுந்தரம் அவர்கள் தமிழீழ விடுதலையை மக்கள் விடுதலை மூலமே அடைய முடியும் என்ற கோட்பாட்டுடன் "புதியபாதை" ஊடாக பொதுவுடமை கொள்கைளையும், புரட்சிகர சிந்தனையையும் ஊட்டிய சிறந்த சிந்தனை சிற்பி.
விடுதலை போராட்டம் வெறுமனவே ஆயுதப்போராட்டத்தில் மத்தியில் தங்கியிருக்க முடியாது, மக்களை அரசியல் மயப்பபடுத்தி முழுமையான மக்கள் போராட்டம் மூலமே அடையமுடியும் என்பதில் அசைக்கமுடியாத தன்னம்பிகையை கொண்ட வீரன். தோழர் சுந்தரம் ஊடகவியலாளர், பொதுவுடமைவாதி, சிறந்த இராணுவ தளபதி என்ற முற்பரிமாணம் கொண்ட செயல்வீரனாகவே செயலாற்றிய வீரன் ஆகும்.
தமிழீழ போராட்டத்தினை முன் நகர்த்திய முதன்மை வீரர்களில் ஒருவராக செயலாற்றியவர். பத்திரிகை துறையில் புதிய புரட்சிகர சிந்தனையை ஊட்டி எம்மைப்போன்ற ஆயிரக்கணக்கான வீரர்களிற்கு பொதுவுடமை கொள்கையையும், புரட்சிகர போதனைகளையும் புதியபாதை என்ற சிறந்த பத்தரிகை ஊடாக எமக்கு ஊட்டிய சிறந்த ஊடகவியலாளர்.
ஆரம்பத்திலேயே பொதுவுடமை கொள்கை மீது ஈடுபாடு கொண்டிருந்த சுந்தரம், வடக்கு, கிழக்கு எல்லைகளை கடந்து மலையகத்தில் வாழும் மக்களின் விடுதலை மீதும் கரிசனை கொண்டு அவ் மக்களின் அடிமை வாழ்விற்கு எதிராகவும் தனது ஆழமான கருத்துக்களை கொண்டிருந்தவர்.
ஏகாதிபத்திய நாடுகளின் அதிகாரவெறியினால் மூன்றாம்தர நாடுகள் எவ்வாறு சுறண்டப்படுகின்றன என்பதை தெளிவாகவே எடுத்து கூறிய சிறந்த பொதுவுடமை கொள்கைவாதி.
இன்றைய காலகட்டத்தில் இவ் பரிமாணங்களை கொண்ட சிறந்த ஊடாகவியலாளரையோ, பொதுவுடமைவாதியையோ, சிறந்த தளபதியை காணமுடியாத நிலையில், அன்று இவ் பரிமாணங்களை கொண்ட தளபதியாக, பல அச்சுறுத்தல்களிற்கு மத்தியில் எவ்வாறு மக்கள் பணியாற்றியவர் என்பது நாம் கூறத்தேவையில்லை, அவரது கருத்துக்களும், எண்ணங்களும் பல ஆயிரக்கணக்கான பொதுவுடமைவாதிகள், தோழர்கள் மத்தியில் உருவாக்கி சென்றிருக்கும் என்பதில் எந்த ஜயமுமில்லை.
தமிழீழ மக்கள் விடுதலை கழகம் என்ற புரட்சிகர விடுதலை அமைப்பை தோற்றுவித்த ஸ்தாபக தலைவர்களில் ஒருவராக இருந்ததுடன், கழகத்தின் முதல் இராணுவதளபதியாகவும் இருந்து வந்தவர்.
செயலதிபர் உமாமகேஸ்வரன் என்ற மக்கள் போராட்டத்தின் சிறந்த தளபதியுடன் கைகோர்த்து மக்கள் போராட்டத்தை முன்நகர்த்திய சிறப்பான போராளியும் ஆவார். கட்சியின் இராணுவ கட்டமைப்பை ஒருபுறமாகவும், புரட்சிகர சிந்தனையை எழுதுகோல் மூலமும் எடுத்துக்கூறிய தளபதியும் ஆவார்.
கழகத்தின் இராணுவ படைப்பிரிவை வலுப்படுத்தும் வண்ணம் கழகத்தின் வளர்ச்சிக்கு தேவையான ஆயுதங்களை சேகரிக்கும் நோக்குடன் ஆனைக்கோட்டை காவல் நிலையத்தை தாக்கியழித்து எதிரியின் ஆயுதங்களை கைப்பற்றியே கழகத்தின் இராணுவ பிரிவுக்கு வலிமை சேர்த்த தளபதியும் ஆவார்.
இன்றைய நாள் இல்லை எந் நாளும் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் என்றென்றும் நினைவுகூரப்பட வேண்டியவரே தோழர் சுந்தரம் ஆகும்.