Search This Blog

Friday, 16 May 2014

‘எம் மக்களை மீட்க ‘BTF ன்’ மாபெரும் (முதலைக் கண்ணீர்) போராட்டம்’ : ரி சோதிலிங்கம்

 June 18th, 2009

முகாம்களில் உள்ள மக்களுக்காக செய்யும் போரட்டம் அவர்களின் அவல நிலையையும் அவர்கள் திரும்பிப் போய் தமது சொந்த இடங்களில் வாழும்நிலையை உருவாக்கும் போராட்டமாக இருக்க வேண்டும். அந்த வகையில் யூன் 20ல் BTF -British Tamil Forum ஒழுங்கு செய்துள்ள பேரணி முகாம்களில் அவஸ்த்தைப்படும் மக்கள் மீண்டும் தமது வாழ்விடங்களுக்கு மீள குடியேற்ற உதவும் என்பதை நம்புவது மிகவும் கடினமாக உள்ளது.

2. கடந்த காலங்களில் பிரிஎப் (பிரித்தானிய தமிழர் பேரவை) போன்ற புலிகளின் ஆதவாளர்களால் நடாத்தப்பட்ட போராட்டங்கள் புலிகளின் அழிவுக்கும் புலிகளின் தலைவரின் படுகொலைக்கும் துணை போனது மட்டுமல்ல பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் உயிரிழப்பிற்கும் காரணமானது.

3. ‘புலிகளுக்கும் தமிழீழம் வேணும் எமக்கும் தமிழீழம் வேணும்’ என்பதால் நாம் அவர்கள் இயக்கத்தையும் அந்தக் கொடியையும் ஏற்றுக் கொண்டோம் என்று இயங்கி தமிழீழக் கோசம், பிரபாகரன் படம், புலிக்கொடியடன் நடாத்திய பேரணிகள் போல் இந்த முறையும்  பிரிஎப் புலிக்கொடி தமிழ்க் கொடி விற்று நிதி சேகரிப்பில் இறங்கினால்கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

4. புலிகளின் ஆதரவாளர்களால் இயக்குனர்களால் கடந்த காலங்களில் புலிகளின் பெயரால் மக்களுக்காக மக்களிடமிருந்து சேர்த்த  நிதி மோசடிகளும் தாம் போராட்டத்திற்கு உதவி செய்கிறோம் என்று போராட்த்திற்கும் துரோகம் இழைத்துள்ளதை புலிகளின் ஆதரவாளர்களால் பகிரங்கமாகவே பேசப்படும் விடயமாக உள்ளது.
5. இன்றுவரையில் உயிரிழந்த புலிப் போராளிகளுக்கும் அதன் தலைவருக்கும் அஞ்சலிக் கூட்டம் செய்யாமலும் இன்றும் புலிகள் மீண்டும் எழுவர்; 5வது தமிழீழப்போர் தொடுப்பர்; புலிக்கொடியே தேசியக் கொடி என்றும் கோசம் இட்டு முகாம்களில் உள்ள மக்களின் வாழ்வில் நிலைமைகளை மோசமாக்கும் நிலைக்குத் தள்ளிவிடுவார்கள் என்ற அச்சம் தவிர்க்க முடியாதது.

6. நாட்டில் உள்ள உண்மைச்சுற்றாடல் நிகழ்வை கவனத்தில் எடுக்காமல் புலம்பெயர் சூழலில் கனவு உலகில் தவறான முடிவுகள் எடுக்ப்பட்டு தவறாக வழிநடாத்தப்பட்டது. இதன் முடிவில் புலிகளின் தலைமையும் புலிப்போராளிகளும் அழிக்கப்பட்டனர். இந்த போராட்டங்களின் முடிவுகளின் விமர்சனங்கள் இல்லாமல் மீண்டும் ஒரு போரட்டம் நடத்துவதும் அதுவம் இவ்வளவு அவசர அவசரமாக இது நடாத்தப்படுவதும் இது புலிகளுக்குள்ளேயே நடைபெறும் குழுவாத்தின் பிரதிபலிப்புக்களா என்ற பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

7. இன்று இந்த மக்கள் முகாம்களில்  அவலநிலைக்குத் தள்ளப்பட்டதற்கு முக்கிய காரணமாக இருப்பது 
கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா பிரதேசங்களில் வாழ்ந்த மக்களை புலிகளின் தலைவரையும் ஆயுதங்களையும் பாதுகாக்கும் பொருட்டு மனிதக் கேடயங்களாக பயன்படுத்த இழுத்துச்சென்றதே என்பதை பிரிஎப் மறந்து விடக்கூடாது. இப்படி இழுத்துச்சென்ற மக்களை புதைகுழிகளுக்குள்ளும் செல் மழைக்குள்ளும் பசி பட்டினியுடன் மரணத்தை எதிர்நோக்க வைத்ததும் புலம்பெயர் புலிகளின் தவறான வழிகாட்டலே என்பதை பிரிஎப் மறந்துவிடக்கூடாது. இன்றுள்ள வன்னி முகாம்களைவிட மிகவும் மோசமான நிலையிலேயே இந்த மக்களை புலிகளின் தலைமை வைத்திருந்ததும் இந்த மக்களை புலம் பெயர் புலிகளின் தவறான புத்திமதியில் பலிக்கடாக்களாக்கும் திட்டத்தின் தோல்வியையும் பிரிஎப் மறந்துவிடக் கூடாது.

8. இன்றுள்ள முகாம் வாழ்க்கையை புலிகளே புதுமாத்தளன் - முள்ளி வாய்க்கால் பகுதியில் ஆரம்பித்து வைத்து மக்களை மரணம் நோக்கி நடாத்தினர் என்பதையும் இந்த சம்பவங்களை பிரிஎப் புலிகளிடம் தட்டிக்கேட்கவில்லை என்பதையும் இங்கே கூறிக்கொள்வது தவிர்க்க முடியாதது.

9. அது மட்டுமல்ல இப்படியான இந்த சூழ்நிலையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்களை தலைவரை தனியே விட்டுவிட்டு ஓடிவந்த துரோகிகள் என்றும் இந்த துரோகிகளுக்கு எந்த உதவியும் செய்யக் கூடாது என்று கூறியவர்களும் பிரிஎப்  மற்றும் புலிகளின் ஆதரவாளர்களே.

10. மேலும் மேற்கூறிய இந்த துரோகப்பட்டத்தை ஏக்காளமாக தூபமிட்டு பரப்பிய ஜபிசி ஜிரிவி தீபம் போன்ற ஊடகங்கள் இன்று இவற்றுக்கு என்ன சொல்கிறார்கள்? அரசியல் சவால்களைவிட இராணுவ வெற்றிகளை தமிழீழ வெற்றியாக ஊதித் தொலைத்த இந்த ஊடகங்கள் இன்றும் உங்கள் பேரணியை ஊதித்தள்ளும்.

11. மூன்று மாதங்களுக்கு முன்பு அந்த மக்களின் பரிதாபத்தை துரோகம் என்று கூறிவிட்டு இன்று அதேமாதிரியான சூழ்நிலையில் ஆனால் ஓரளவு மரணபயம் இல்லாமல் வாழும் மக்களை அரசின் மனித உரிமை மீறல்கள் என்று சத்தம்போடும் பிரிஎப் ஏன் அன்று புலிகளால் இதே போன்ற கொடுமைகள் நடைபெறும் போது எதிர்த்து குரல் எழுப்பவில்லை. அப்படி குரல் எழுப்பி  தடுத்து வைக்கப்பட்டு இருந்த மக்களை விடுவிக்கும்படி புலிகளை வற்புறுத்தியிருந்தால் இந்த நிலைமை இப்படி ஏற்ப்பட்டிருக்காது.

12. இன்று புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டபின்பும் அந்தப் பிரதேசங்களில் மீளக் குடியேற்றம் செய்யாமல் எமது மக்களை இப்படியாக அடைத்து வைத்திருப்பதை மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அப்படியான மனித உரிமை மீறல்களை தமிழ்பேசும் மக்கள் எதிர்த்தே வந்துள்ளனர். ஆனால் இதேமாதிரியான மனித உரிமை மீறல்களை புலிகள் செய்யும் பொது மட்டும் காரணம் கூறிய பிரிஎப் இப்போது அரசிற்கு எதிராக குரல் எழுப்புவதை வரவேற்கும் அதே வேளை தமது கடந்தகால தவறுகளையும் பகிரங்கமாக மக்களிடம் ஒத்துக்கொள்ள துணிந்து முன்வர வேண்டும்.

13. இந்த யுத்த திருவிழாவை நடாத்த பண உதவி செய்த புலம் பெயர் மக்கள் திருவிழா முடிவில் துப்பரவு வேவைகளுக்கும் செய்யவும் முன்வரவேண்டும். வன்னி நிலப் பரப்பு எங்கும் நிலக் கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. புலிகளும் அதனைத் தெரிவித்துள்ளனர். ஆகவே இந்த யுத்தத்திற்கு ஆரம்பத்தில் போர் முழக்கம் இட்டவர்கள் இந்தக் கண்ணி வெடி அகற்றும் பணிக்கு உதவுவது அவசியம்.

14. இன்று வன்னி மக்களின் முகாம் வாழ்க்கையில் இலங்கை இராணுவம் பொலீசார் ஒருபக்கம் லஞ்சம் வாங்கிக்கொண்டு மக்களை வெளியே அனுமதித்துவிட்டு மக்கள் தப்பி ஓடிவிட்டனர் என்று தேடுதல் வேட்டைகள் செய்வதும் இவர்கள் காணாமல் போனோர் என தமிழர்கள் பிரச்சாரம் செய்வதும் நிகழ்கின்றது. புலிகளுடன் தொடர்புபட்டவர்கள் அழைத்துச் செல்லப்படும் சம்பவங்கள் நிகழ்ந்தள்ளன. நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. இவர்கள் எங்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்பது பற்றிய விபரங்களை அரசு வெளியிடவில்லை. இவை பற்றி சுனில் அபயசேகர போன்ற மனித உரிமைவாதிகள் தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அவர்களது குரல்களைப் பலப்படுத்துவது மிக மிக அவசியம்.

15. மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் கடந்தகாலத் தவறுகள் பற்றிய விமர்சனத்தை முன்வைக்காமல் பிரிஎப் திடீரென இந்த மக்களுக்கான போராட்ட களத்தில் இறங்கியுள்ளது பலமான சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. இப்படியான போராட்டங்களை ஆரம்பிக்க முன்னர் பிரிஎப் ஒரு சுய விமர்சனத்தை முன்வைத்திருக்க வேண்டும்.

உங்கள் கருத்து
This entry was posted on Thursday, June 18th, 2009 at 1:40 am and is filed under ::யுத்த நிலவரம், புலம்பெயர் வாழ்வியல், சோதிலிங்கம் ரி. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.
15 Comments so far
1.     lavan on June 18, 2009 7:54 am
“இப்படியான போராட்டங்களை ஆரம்பிக்க முன்னர் பிரிஎப் ஒரு சுய விமர்சனத்தை முன்வைத்திருக்க வேண்டும்.” இது அவர்களின் அகரதியிலே கிடையாது இப்போது பிரிஎப் உள்முரண்பாடுகளினால் இரு பிரிவுகளாக செயல்படுவதாக தெரிகின்றது இதில் எந்த பிரிவு? இதை ஒழுங்கு செய்திருக்குது.

2.     பார்த்திபன் on June 18, 2009 11:36 am
“புலன்” பெயர்ந்ததுகள் கொஞ்சம் புத்தியைப்(இருந்தால்) பாவித்துச் சிந்திக்கும் வரை பிரிஎப் போன்ற அமைப்புகள் திருந்தப் போவதில்லை. மக்களை முட்டாளாக்குவதே இவர்களது தலையாய கடமை.

3.     Vannikumaran on June 18, 2009 2:52 pm
சோதி > உங்கள் கேள்விகளை புரிந்து அதை செவிசாய்க்கும் நிலையில் பிரிஎப் ஓ அல்லது கண்மூடித்தனமாக அதனை பின்பற்றி ஆதரவு நல்கும் புலம்பெயர் தமிழர்கள் இல்லை.
புலியின் தலைவரே தன் பாதையின் தோல்வியை ஒப்புக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட பிறகு எம்மக்களுக்காக அல்லது தமிழுக்காக தமிழருக்காக அவர்களின் அரசியல்பாதையை பின்பற்றுவதோ அல்லது மாண்டவர் மீழுவார்என ஓடுமீனோட உறுமீனுக்காக வாடியிருந்து இன்று உயிருடன் தப்பிவந்த எம்மக்களையும் காவு கொடுப்பதை விட இதுவரை காலமும் புலிகள் செய்வார்கள் மக்களைக் காப்பாற்றுவார்கள் என நம்பி வாய்இருந்தும் ஊமைகளாய் இருந்து பின் இதை குறை சொல்லுவதை விட உண்மையில் கஷ்டப்படும் தாயக மக்ளுக்காக தங்கள் வயிற்றை நிரப்ப பாடுபடும் புலிகளின் புலம் பெயர் பினாமிகள் போல் இல்லாது செயல்திட்டங்களை முன்னெடுக்க செய்யக் கூடிய வழிவகைகளை ஆராய வேண்டும். அந்த முன்னெடுப்பு சரியானதாக செல்லும் போது யாரும் எதுவும் செய்து விட முடியாது. தலைவர் இருந்தாரா இறந்தாரா என்பதை கூட உடன் உறுதிசெய்ய முடியாத அல்லது சாதாரண போராளிக்கு கூட மாலைகட்டி வீரவணக்கம் செலுத்திய புலி ஆதரவாளர்கள் ஏன் இவ்வளவு காலதாமதமாக வீரவணக்கம் செய்கிறார்கள்.தலைவனுக்கே இந்த நிலை என்றால் இவர்களின் பாதையில் எம்மக்களுக் கோ அல்லது தமிழுக்கோ விமோசனம் கிடைக்க வழிசெய்யமுடியும் என்று நம்புவதற்கு துளிகூட வழியில்லை.

விமர்சனம் செய்பவர்கள் எல்லாம் துரோகிகள் என்று புலிசார்பான கருத்தை மட்டும் வலியுறுத்தும் நபரையோ அல்லது நிறுவனங்களையோ இனி தமிழர்களின் நன்மை கருதி தமிழர் துரோகிகளாக கருகுதப்பட வேண்டும். 30வருடம் புலிகளின் பாதையில் அழிந்த தமிழனம் தனக்காக எஞ்சியிருக்கும் வளங்களைப் பாவித்து புதிய பாதைகளை அமைதியான வழியில் உலகின் யதார்த்த பூர்வமான நகர்வுடன் இணைந்து நகர வேண்டிய தேவை இருப்பாதால் தயவு செய்து இனிதவறு என்றோ சரி என்றோ புலிகள் பற்றியோ அல்லது விமர்சிப்பதில் நேரத்தை கடத்தும் ஒவ்வொரு வினாடியும் நாம் முகாம்களில் ஒவ்வொரு தமிழனை இழந்து கொண்டிருக்கிறோம் அதை தடுப்பதற்கு அரசுடன் இணைந்தாவது எக்களைக் காப்பாற்றும் வழிகளைத் தேடுவோம். துரோகம் என்று பார்த்தால் தமிழ் மக்களின் அழிவிற்கு புலிகள் செய்தது போன்று யாரும் செய்யவில்லை அதனால் அரசு செய்வது சரியென்ற கருத்தை நான் ஆதரிக்கவில்லை. அதை தடுக்க வழி செய்வதை விட்டு தொடர்ந்து புலிப்புராணம் பாடுவதையோ அல்லது தமிழீழக் கோட்பாட்டை தொடருவதன் மூலம் பல லட்சம் தமிழரை பலி கொடுக்க நேரிடும் மேலும் பல லட்சம் தமிழரை பலி கொடுப்பதை நிறுத்தவேண்டும். மீண்டும் ஒருமுறை புலிகளின் தலைவரே தன் கோட்பாட்டில் தோல்வி கண்டு தற்பலி செய்து கொண்டபின் யாரும் தொடர்ந்து அதை கதைப்பதில் அர்த்தமில்லை. முடிந்தால் அவரின் ஆத்மசாந்திக்கு மரியாதை செலுத்துவோமாக.
வன்னிக்குமரன்

4.     Azan on June 18, 2009 9:35 pm
பிரிஎப் பத்மநாதன் இந்த ஊர்வலத்துக்கு கொடிபிடிக்க வரச்சொல்லி சனத்தைக் கூப்பிட தீபத்துக்கு இண்டைக்கு வந்தார். வந்தவங்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வேர்த்து விறுவிறுத்தார்.பாவம். இவர் தங்களை ஒருத்தரும் விமர்சனம்செய்ய வேண்டாமாம். இது எப்பிடியிருக்கு?. இவர்களெல்லாம் ஒரு பொது அமைப்பு??

5.     tamil on June 18, 2009 9:36 pm
Hi Sothy
Sorry to write in English. You point out very clearly. BTF keep try to cheat our people again and again. Emarupavan erukumvarai earmartupavanum erupan. Emathu Elathu uravukalai kadavul kapathuvar, Pulampertha uravukalai yar kapathuvar ?. I listen your questions to BTF Pathmanathan at THEEPAM tonight. He is poor guy he was not answering any question properly to anyone.
What BTF, TRO, etc have to do now at the moment is dissolving their organisations and give the money (they collected from the people behalf of LTTE) to IDP camp. They should take the partial responsibility to the last month disaster in Vanni. If they are honest they will do coming Saturday at Hydpark. They can’t simply give up their duty as cheating our people,
Tamil

6.     amma on June 18, 2009 9:38 pm
சனங்களை சொந்த இடங்களில இருந்து அடிச்சு கட்டியிழுத்துக் கொண்டு வந்து தங்களுக்கு கேடயமாக்கி பங்கரில வைச்சுப்போட்டு இப்ப இந்த இடம் உங்கட பாரம்பரிய பிரதேசம் எண்டுறியள் அப்ப நீங்க இங்கே ஜரோப்பாவில ஏன் இருக்கிறியள்.

7.     viji on June 18, 2009 10:41 pm
இன்றைக்கு தீபம் ரிவியில் வந்த பத்மநாதன் இரண்டு லட்சம் சேர்ந்தது ஏதும் போராட்டம் நடத்துறதெண்டால் தமிழரைக் கேளுங்கோ என ஸ்கை நியுஸ் எழுதுகிறது என பெருமையடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு தெரியவில்லை இரண்டு லட்சம் சனம் என்றாலும் இரண்டு கோடியே என்றாலும் பிழையான கோசங்கள் கொண்ட போராட்டங்கள் வெகுஜனங்களிடம் எடுபடாததோடு பயங்கரமான எதிர்விளைவையும் ஏற்படுத்தி தரும் என்பதை. இரண்டு லட்சம் றோட்டில் இறங்கி மக்களை காப்பாற்ற முடிந்ததா? தலையை காப்பாற்ற முடிந்ததா? தலையின் தலைக்குள் எவ்வளவு களிமண் இருக்கும் என ஆமி நோண்டுகிறான்.

அத்தோடு பத்மநாதன் நீங்கள் எல்லாம் என்ன வேலைத்திட்டம் செய்யிறியள்? கதைக்கிறது சுலபம் என்ன செய்யிறியள் என சொல்லுங்கோ என வம்பிற்கு இழுக்கிறார். எண்பதுகளின் இறுதிப்பகுதியில் அகதிகளாக வந்தவர்கள் ஒரு சந்திப்பை லண்டனில் ஒழுங்கு செய்தார்கள்- ஊரிலுள்ள மக்களுக்கு சேவை செய்யலாம் என. கூட்டத்தில் இருந்த கிட்டு எழும்பி சொன்னார் எங்களை மீறி செயற்பட்டால் ஊரிலுள்ள உங்கள் உறவினர்களை மண்டையில் போடுவோம்!

இப்ப பத்மநாதன் வந்து கேட்கிறார் என்ன வேலைத்திட்டம் செய்யிறியள்? பத்மநாதனுக்கு இப்படி கேட்க வெட்கமே இல்லையா?

8.     Veera Kathi Pillai Udayar on June 19, 2009 6:31 am
Puli Padai ( LTTE ) no longer an asset to Tamils But a Liability!
·Puli Padai (LTTE – Tigers) should be dismantled Completely, because they are no longer an asset to Tamils, but a liability.
·Though Talaivar (Pirabaharan) and his boys made lot of blunders, Tamil people whole heartily supported them, as they were fighting and won several battle, specially Elephant Pass battle and Katunayaka Airport attack.
·Tigers were having a de facto state and managing it in a Totalitarian Dictatorship manner and Tamil people tolerated this because Tamil people believed one day we will get Eelam and we can run a Democratic Government and if puligal (LTTE) refused to give Democracy after establishing Eelam, Tamil people would have revolt against them.
·Pirabaharan is puligal (Tigers) and Puligal (Tigers) is Pirabaharan and he maintained a one-man rule during the existence of Puli Padai (LTTE)
·He made several mistakes and led us to the present position. First mistake is killing individuals. First Killing as admitted by him is that of Duraiappa. Duraiappa was a Young Mayor of Jaffna, Lawyer and defeated GG Ponnambalam at Jaffna Electorate. He was very popular among the poor people of Jaffna electorate and helped Jaffna Town people a lot. During 1970 Parliamentary Election Amirthalingam, Sivasithamparam and GG Ponnampalam lost the election. GG Ponnampalam gave up politics and abandoned Tamils and look after his wealth accumulated by him.
·Amirthalingam and Sivasithamparam wanted to win the next election at any cost. S.J.V Selvanayagam After telling the Tamils that he is the leader who could safeguard Tamils, at the end he said, only God has to save Tamils and he could not do any thing, Tamils wasted their time with him.
·Yogeshwaran wanted to contest Jaffna seat, but Duraiappa was a stumbling block. The Trio Amir, Siva and Yogeshwaran spread slanders about Duraiappa and branded him as Police informant and instigated Young boys to kill him, Young and immature Prabahana and Amir’s eldest son plot to kill Duraiappa and Pirabaharan carried out the murder.
·Amirthalingam became Leader of Opposition and told Tamil people that he will get Eelam, other wise his body will come to eelam, covered by Raising Son Flag of TULF. But he ended up getting DDC- District Development Council and cheated Tamils.Jaffna Library was burned by UNP during DDC election
·Pirabaharn and Umamaheswaran had a gunfight in Chennai and were in Madras jail. They were released on bail pending the Criminal case hearing. Pirabaharan jumped the bail and came to Jaffna and organized the Thinnaveli attack.
·JR and UNP organized 1983 riots and Promoted Pirabaharan as Tamil leader and Indra Gandhi gave Training and Arms.
·After the unfortunate death of Indra Gandhi, Rajiv Gandhi came to power and Pirabaharan was about to lose Vadamarachi Operation and Rajiv Gandi Saved him by intervening and send Indian Army and signed the Indo Sri Lanka agreement.
·After the Indian Army leaving Sri Lanka with the joined action of LTTE and Premadasa, Pirabhan Killed Arirthalingam, Premadasa and Rajiv Gandhi. These are major mistakes on the one-man ruler.
·LTTE chased out Muslims from Jaffna and Karuna and Karikalam led this Muslim eviction because some Muslim thugs and home guards attacked Tamils in Batticaloa. Karuna and LTTE killed Muslims civilians in Mosque.
·Puli Padai (LTTE) also forcibly evicted half a million Tamils from Jaffna Peninsula and herded them into Vanni after the defeat of LTTE in Jaffna
·LTTE killed Premadasa and helped Chandrika to come to power and Chandrika is equally bad as Premadasa. Chandrika captured Jaffna and started war against LTTE and ended up in lousing Vanni and Elaphatpass.
·LTTE forced thirteen EROS MPs to resign at gunpoint after 1989 election and allowed Douglus Devananda to become a minister.
·Instead of fighting one enemy at a time, Pirabaharan fought ten enemies at a time and he only wanted money and Children of Tamils and never seek or listen their advice
·Whether we like it or not Mahinda will be the leader for very many years and he will be the next one-man ruler of whole of Sri Lanka. No more Democracy for Singhalese, Tamils and Muslims.
·LTTE used Tamils as human shield during the War and prevented Tamils leaving war zone at gun point ( Taliban did not do this in Swat Wally ) and gave a chance to Singhalese Army Killed several innocent Tamils and several are wounded and disabled.
·It will be a good tactics for Tamils to work with Mahinda to release 300,000 Tamils and Thousands of Tiger Boys and Girls trapped by Pirabaharan and Puli Padai – LTTE mistakes.
·Tamils should join Sri Lankan Army and Police in large numbers, the Diaspora Tamils Boys and Girls should join UK, USA, Australia, Canada, NATO, Indian and European Army. WITH OUT A TAMIL ARMY, TAMILS HAVE NOTHING.
·Educated and Diaspora Tamils should get involved Sri Lankan National Political Parties, sixty years of experience shows regional parties getting involved in Parliamentary Politics are of no use and detrimental to Tamils other wise Karuna, Pillaiyan and Douglus will be our Tamil Leaders. Regional Parties may get involved in Local and Provincial Politics.

9.     நண்பன் on June 19, 2009 8:23 am
//கிட்டு எழும்பி சொன்னார் எங்களை மீறி செயற்பட்டால் ஊரிலுள்ள உங்கள் உறவினர்களை மண்டையில் போடுவோம்!//
இவர்களது கனவுகள் நனவாகின. மகிந்த கடவுளுக்கு தோத்திரம்.

10.   Shri on June 19, 2009 9:07 am
we had given almost 30 years of hell life to not only our tamil people but also to the Sinhalese community as well. Yet this is invading in a new form as a “horror version amongst the yonger generations of western tamil community”. Anyone who has a real sense and concern FOR THE TAMIL PEOPLE, would put a full stop to this seperate state call and look forward to work for a new life to the innocent poor savaged communities of SRILANKA. If anyone really concerned about the tamil people then they should speakout fearlessly to the younger generation and save them from this purposeless, culculated misleading.
A tamil citizen should travel AND work fearlessly from KKS to GALE. Same a Sinhalese should travel AND work fearlessly from MOROTUWA to JAFFNA.
GOD BLESS THE CITIZENS OF SRILANKA.
anything is possible if you have a will
shri

11.   சாந்தன் on June 19, 2009 2:50 pm
டியர் வீரகத்திப்பிள்ளை,
Puli Padai (LTTE – Tigers) should be dismantled Completely, because they are no longer an asset to Tamils, but a liability.
…….·Pirabaharan is puligal (Tigers) and Puligal (Tigers) is Pirabaharan and he maintained a one-man rule during the existence of Puli Padai (LTTE).
பிரபாகரனே புலிகள்..புலிகளே பிரபாகரன் எனில் புலிகள் இனிமேல் அழிக்கப்பட வேண்டும் என சொல்வதில் முன்னுக்கு பின்னான முரண்பாடுள்ளது கவனித்தீர்களா?

12.   dirtymaran on June 19, 2009 4:50 pm
MR.T.Sothilingam What you haave written is already said by morethan 100 experts. Peopose something, based on your analysis organaise a seris of meetings. We declare the end of LTTE and talk about alternatives. That is the only medicine for LTTE paranoia.

13.   Vannikumaran on June 19, 2009 10:26 pm
Shri
I aggreed your point . if it possible then srilankan economi will grow and public get goodlife. But stop the differnt treatment bettwen the srilankan citizen on language and religious base, so we joint togather and explain as smoothley our problems to other communities who live in srilanka.they also human if they don’t have poverty and and dipresion why should do they againgest. basiccally we did not do towards to after 1920 in srilanka any of the prjects or prograssess for this ethinic confilics as tamils.
we will
thanks
Vannikkumaran

14.   Veera Kathi Pillai Udayar on June 20, 2009 6:09 am
Santhan
You should understand meaning of diamantle and dustroyed, LTTE should be dismantled means , people like rugrakuaran should retire from pollitics and run LTTE corner shop

15.   Suki on June 21, 2009 11:29 pm
My deepest request to the LTTE fellowers (if any left) that, atleast from now on every one should get into their heads that “fight with weopens” won’t bring any peace or harmony to our land & to our thamil people. 30 years of fight is enough to enough. We all will have a mixer of openions towards this but we all are sick and tired of the last 6 months of war and innocent deaths.
“What goes around will come around” so now, we had the good lessons. So please get together for a “political reasonable solution”. In any circumstances we do not want any more formed groups to be arise from all over the world for another war!
So lets talk through to political professionals (decency) diplomatic way to find our freedom for Thamil people & to our lands. God Bless all.
Thanks
Suki


No comments:

Post a Comment